Powered By Blogger

Monday, 21 September 2015

கே வி ஆனந்த்தின் புதிய ஹீரோ ஆர்யா

கே வி ஆனந்த் அநேகன் படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டுஇருந்தார். தற்போது தனது புதிய படத்திற்கான அறிவிப்பை பற்றி ஒரு புதிய செய்தி வெளிவந்துள்ளது. அதாவது தனது புதிய படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிப்பார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

ஆர்யா தற்போது இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் ஆர்யா கே வி ஆனந்த் படத்தில் இணைவார் என்று கூறபடுகிறது.

மேலும் இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறார் என்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைபார் என்றும் கூறபடுகிறது. இது வழக்கமான கே வி ஆனந்த் படமாக இருக்கும் என்றும் கூறபடுகிறது.

படத்தை பற்றிய பிற அறிவிப்புகள்,நடிகர், நடிகைகள் மற்றும் பிற செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறபடுகிறது. ஆர்யாவுடன் கே வி ஆனந்த் என்ற ஒரு புதிய கூட்டணி சேர்ந்து இருப்பதால் ஒரு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

kv anand next movie, arya, arya next movie, tamil cinema news
arya

Tags : kv anand next movie, arya, arya next movie, tamil cinema news, arya & kv anand

Thursday, 17 September 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் காபாலி படத்தின் முதல் போஸ்டர் வெளியிடபட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது கபாலி என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளார். கலைபுலி தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினி ஒரு சர்வதேச தாதா வாக நடிக்கிறார். இந்த படத்தில் வயதான கதாபத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் இசை சந்தோஷ் நாராயன். தற்போது இந்த படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டர் இரண்டு இன்று வெளியிடப்பட்டது. இதில் ஒன்றில் ரஜினி அனனவரையும் சங்கிலியில் இழுப்பவராகவும், இன்னொன்றில் அவர் ஒரு தாதா போல் இருபதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

kabali,kabali poster,rajini. rajini next movie stills
kabali stills

kabali,kabali poster,rajini. rajini next movie stills
kabali stiils1
Tags : kabali,kabali poster,rajini. rajini next movie stills

Tuesday, 8 September 2015

ரஜினிமுருகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய முழுவிவரம் உள்ளே

சிவாகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள படம் ரஜினிமுருகன். இந்த படத்தை பொன்ரம் இயக்கயுள்ளார் மேலும் D இமான் இசையமைத்து உள்ளார்.

இந்த கூட்டணி ஏற்கனவே வருத்த படாத வாலிபர் சங்கம் என்ற ஹிட் படத்தை கொடுத்து உள்ளது. தற்போது இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி படம் செப்டம்பர் 17 ம் 2015 ரிலீஸ் செய்யப்படும் என்று கூறபடுகிறது.

சென்சாருக்கு சென்ற இந்த படம் எந்த கட்டும் இல்லாமல் U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. சிவாகர்திகேயன் தற்போது இயக்குனர் அட்லி இடம் அசிஸ்டெண்ட் டாக இருந்த பாக்கியராஜ்  என்ற புதிய இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார். அவர் தற்போது இந்த படத்தின் வெற்றியை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்.

காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் என்று உருவாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

sivakarthikeyan, rajinimurugan, tamil cinima update
Add caption

Tuesday, 25 August 2015

புலி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் புதிய தேதி அறிவிப்பு

புலி இளைய தளபதி விஜய் நடித்து ரிலீஸ் ஆகா உள்ள புதிய படம். இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாஸன் நடித்துயுள்ளானர், ஸ்ரீ தேவி மற்றும் சுதீப் மேலும் ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உள்ளது.

புலி படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்.

புலி படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது ஆனால் படத்தில் ஒரு சில வேலைகள் மீதம் உள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதியை பட குழு மாற்றி உள்ளனர்.

ஆகவே புலி படம் அக்டோபர் 1ம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி மாற்றப்பட்டா படம் புதிய தேதியில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. 

puli release date, puli, vijay
Puli Poster



Tags : puli release date, puli, vijay, tamil cinema

Also check

More Cinema News : Click here

 

Friday, 21 August 2015

தனுஷ் மற்றும் துரை செந்தில்குமார் இனையும் முதல் முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ்

தனுஷ் தற்போது வி ஐ பி 2 வில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் படம், பிரபு சாலமன் படம் மற்றும் துரை செந்தில்குமார் படத்தில் நடிக்கிறார்.

ஒவ்வொரு  படமும் ஒவ்வொரு கதை களம் கொண்டது. இது பற்றி தற்போது ஒரு புதிய செய்தி வந்துள்ளது துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறபடுகிறது.

கதை படி அண்ணன் தம்பி வேடத்தில் நடிக்கிறார் என்றும் அதன் படி செந்தில்குமார் திரைக்கதை அமைத்து உள்ளார் என்றும் செய்திகள் வெளிவருகிறது.

மேலும் தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிப்பதால்  இந்த படம் பெரிய எதிர்பார்பை பெரும் என்றும் கூறபடுகிறது.

படத்தை பற்றிய பிற அறிவிப்புகள் மற்றும் பிற செய்திகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறபடுகிறது.

dhanush,tamil actor,cinema news
dhanush

Tags : dhanush, tamil actor, cinema news, dhanush next movie, 

Friday, 14 August 2015

வாலு விமர்சனம்

நடிப்பு

  • சிம்பு
  • சந்தானம் 
  • ஹன்சிகா
  • VTV கணேஷ் 
  • நரேன் 

இசை - தமன் S

ஒளிபதிவு -  ஷக்தி 


இயக்கம் - விஜய் சந்தர் 

தயாரிப்பு - நிக் ஆர்ட்ஸ், மேஜிக் ரேஸ்  மற்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ் 

கதை:

சிம்பு வேலைக்கு போகாமல் ஜாலியாக நண்பர்களுடன்  ஊர் சுற்றும் கேரக்டர். அப்பா அம்மா பேச்சை கேட்பது கிடையாது தங்கையுடன் அன்பு சண்டை என ஜாலியாக போகிறது அவரது வாழ்கை. வழக்கம் போல ஹன்சிகவை பார்த்தவுடன் காதல்.

அவருடைய காதலில் திடீர் என்று ஒரு பிரச்சனை வருகிறது அதனை அவர் எப்படி சமாளித்தார் ஹன்சிகாவுடன் சேர்ந்தாரா என்பது தான் மீதி கதை.

சிம்பு 3 வருடம் களித்து வந்தாலும் மாஸாக வந்துள்ளார். எத்தனை வருடம் ஆனாலும் அந்த எனற்ஜி மட்டும் அப்படியே உள்ளது சிம்புவிடம்.

சந்தானம் அவர் வந்து பேசினாலே ஒரே காமெடி மேலும் அவர் VTV கணேஷ் வுடன் செய்யும் காமெடி சூப்பர். சந்தானம் படத்தின் இன்னொரு ஹீரோ.
ஹன்சிகா வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார். அம்மா அப்பாவாக வரும் நரேன், ஸ்ரீ ரஞ்சினி, VTV கணேஷ், அனைவரும் தந்த வேலையை சிறப்பாக செய்து உள்ளனர்.

படத்தின் + 

இசை, சிம்பு, காமெடி காட்சிகள், காலகட்டத்திற்கு போருந்தும் காட்சிகள் 

படத்தின் -

கிளைமேக்ஸ், வில்லன் கேரக்டர் முறையாக இல்லை

Mark - 2.75/5 

simbu,vaalu
vaalu

Tags : vaalu review, simbu, review,

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்

நடிப்பு :ஆர்யா
  • சந்தானம் 
  • தமன்னா
  • பானு 
  • விஷால் (கெஸ்ட் ரோல்)
  • வித்யுலேகா  
  • ஷகீலா மற்றும் பலர்
இசை - இமான்

ஒளிபதிவு - நிரவ் ஷா

இயக்கம் - ராஜேஷ்.M

தயாரிப்பு - ஆர்யா

கதை:

ஆர்யா மற்றும் சந்தானம் இனை பிரியா நண்பர்களாக இருகிறார்கள். அப்போது சந்தனத்திற்கும் பானுவிற்கும்  திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணத்தில் ஆர்யா செய்யும் கலாட்டாக்கள் பானுவுக்கு பிடிக்கவில்லை அதனால் சாந்தனத்தை ஆர்யாவிடமிருந்து பிரிந்து வருமாறு கூறி 6 மாதம் டைம் கொடுக்கிறார்.
இதனால் சந்தானம் ஆர்யா விற்கு திருமணம் செய்தால் அவர் தானாகவே பிரிந்து செல்வார் என்று நினைத்து அர்யவிற்கு பெண் தேடுகிறார். அப்போது தமன்னாவை ஒரு திருமண தகவல் மையத்தில் பார்க்கிறார் பிறகு நடக்கும் காமெடி காலாட்டாகள் அவருடம் ஆர்யாவின் காதல் தான் வி ச ஒ ப மீதி கதை.

ஆர்யா சந்தானம் தங்களால் முடிந்தவரை காமெடி செய்கிறார்கள். தமன்னா பானு தங்கள் வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். விஷால் சிரிப்பு போலீசாக வந்து போகிறார். மேலும் வித்லேகா, சுவாமிநாதன்,ஷகீலா,  மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் வந்து காமெடி செய்து போகிறார்கள்.

படத்தின் + 

ஆர்யா,சந்தானம்,பாடல்கள் மற்றும் பின்னணி இசை, காமெடி காட்சிகள், வசனம் 

படத்தின் - 

கதை, குடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இருப்பது, பல காட்சிகள் ஒரே மாதிரி இருப்பது, காமெடி காட்சிகள் சில இடங்களில் சலிப்பு ஏற்படுவது.

Mark - 3/5

arya,santhanam,tamanna
vsop review

Tags : arya, tamil cinema, vasuvum saravananum onna padichavanga review, vsop review,